நோட்டு ஸ்வரம் (இங்கிலீஷ் மியூசிக்கல் நோட்ஸ்) இதைத்தான் கர்நாடக இசையில் நோட்டு ஸ்வரம் என்று கூறுகிறார்கள். இசை மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர் அவர்கள் ஆங்கில மற்றும் ஐரிஷ் டியூன் சாயலில் இருந்த சில பிரபலமான பாடல்களை போல் சில பாடல்களை ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனியாக ஏறத்தாழ 39 நோட்டு ஸ்வரங்கள் எழுதியுள்ளார். வெவ்வேறு தாளங்களில் அனைத்தும் சங்கராபரண ராகத்தில் உள்ளவையாக இருக்கின்றன.
கீழை மேலை நாடுகளின் கலாச்சார சங்கீத சந்திப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த நோட்டு சுரங்கள் இருக்கின்றன.
மேடைக் கச்சேரிகளில் பலரும் இதை வெவ்வேறு காலங்களில் வேகத்தை கூட்டியும் குறைத்தும் கமக்கங்களுடனும் பாடுகிறார்கள்.
நோட்டு ஸ்வரம் : குரு குஹ பாதபங்கஜ( முருகன்/ கார்த்திகேயன்)
தாளம்: திஸ்ர ஏகதாளம்
ராகம் : சங்கராபரணம்(29)
பாடல் வரிகள்:
குரு குஹ பாத பங்கஜமதி குப்த மணிஸ மாஸ்ரயே
நிரதி ஷயணிஜ பிரக்காஷக நித்ய ஷு க ஃபலப் பிரதம்
நிரஜ நாப புரந்தர மாராரி வாரிஜ சம்பவ வேதித் தவ்யம்
அத்ரிசுக வசிஷ்ட வாம தேவாதி த போதன வந்திதம்.
ஸ்வரங்கள்:
ஸ ரி க ரி ஸ நி° த° த° த° நி °ஸ
ரி ரி ரி க ம ப ப ஸ
ஸ ரி க ரி ஸ நி° த° த° த° நி °ஸ
ரி ரி ரி நி ரி ஸ ஸ ஸ
ப த ப ப த ப ம ரி ம ம ரி ம
க ஸ க க ஸ க ரி நி ° த° ஸ (2)
ப ஸ ஸ நி° ஸ த° த° த° ரி ஸ
நி °த° ப த° நி ஸ ஸ ஸ
நோட்டு ஸ்வரம்: ஷக்தி ஸகித கணபதிம் ( கணபதி / விநாயகர்)
தாளம் : திஸ்ர ஏகதாளம்
ராகம் : சங்கராபரணம்(29)
பாடல் வரிகள்:
ஷக்தி ஸகித கணபதிம் ஷங்க ராதி சேவிதம்
வீரத்த சகல முனிவரசுர ராஜ விநுத குரு குஹம்
பக்தாலி போஷகம் பவசு தம் விநாயகம்
புக்தி முக்தி ப்ரதம் பூஷித்தாகம் ரக்த பாதாம்புஜம் பாவயாமி.
நோட்டு ஸ்வரம் : ஷ்யாமலே மீனாக்ஷி….( Twinkle Twinkle Little Star ⭐)
தாளம் : சதுஸ்ர ஏகதாளம்
ராகம் : சங்கராபரணம்(29)
ஆரோஹனம் : ஸ ரி 2 க2 ம1 ப த 2 நி2 ஸ்
அவரோஹனம் : ஸ் நி2 த 2 ப ம1 க2 ரி 2 ஸ
பாடல் வரிகள்: (மதுரை மீனாட்சி அம்மன்)
ஷ்யாமலே மீனாக்ஷி சுந்தரேஸ்வர ஷாக்ஷி
சங்கரி குருகுஹ சமுத்பவே சிவேவா
பாமர மோச்சினி பங்கஜ லோ ச்சனி
பத்மாசன வாணி ஹரி லக்ஷ்மி வினுதே ஷாம்பவி
ஸ்வரங்கள்:
ஸ ரி க ம ப. ப.
த நி ஸ் ஸ் நி த ப ம ரி
ம த ம ரி க ப க ஸ
ரி க ரி நி ஸ. ஸ.
ப. ப. ப. ம. ம. ம.
க.க.க. ரி.ரி.ரி.
ப. ப த ப
ம. ம ப ம
க. க ம க
ரி.ரி க ரி
(ஸ ரி க ம ப. ப.)
ஆஞ்சநேயம் சதா பாவயாமி அப்ர மேயம் முதா சிந்தயாமி
அஞ்ஞானானந்தநம் வான ரேஷம்
வரம் பஞ்ச வக்த்ரம்
சுரேஷாதிவந்த்யம்
குரு குஹ ஹிதம் ஷாந்தம்
சதா சேவித ஸ்ரீராம பாதபங்கஜம்
சஞ்சீவி பர்வத ஹரம் முகாப்ஜம் சதா ராமச்சந்திர தூதம் பஜே.





