top of page

இயன்முறை மருத்துவம் - ஒரு இயற்கை மருத்துவம் (Physiotherapy)

Updated: Dec 5, 2022

வருமுன் காப்போம்! வாழ்க்கைக்குத் தேவையான விளையாட்டும் உடற்பயிற்சியும்.

விளையாட்டு இயன் முறை மருத்துவம் ( Sports Physiotherapy)

வாழ்க்கையில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லை என்றால் பயனில்லை.  சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.

எந்தத் துறை விளையாட்டாக இருந்தாலும் கணுக்கால் தசை வலி,  மூட்டு தசைநார் வலி மற்றும் தோள்பட்டை காயம் ஏற்படும்போது அதில் இருந்து குணமடைய விளையாட்டு இயன்முறை மருத்துவம் உதவுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு கையில் அடிபட்டால் குணமாகும்வரை விளையாட்டில் ஈடுபட முடியாது.

அப்படியே இருந்தால் உடல் எடை கூடிவிடும்.  தசைகள் தளர்ந்து விடும்.  கையில் அடிபட்டால் காலிலும், காலில் அடிபட்டால் கைக்கும் தனிப்பயிற்சி தருவதால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

சீனாவில் ஒரு விளையாட்டு வீரரை உருவாக்க குழந்தைப் பருவத்தில் இருந்தே பயிற்சி தருகின்றனர். ஆனால் நமது நாட்டில் 10 வயதுக்கு மேல்தான் விளையாட்டுப் பயிற்சியை தருகின்றனர்.  அதன் பிறகு குறிப்பிட்ட விளையாட்டுக்கான தனிப்பயிற்சி தருகின்றனர்.  அதிலும் பத்தாம் வகுப்பிலேயே  குழந்தைகளை விளையாட கூட அனுமதிக்காமல் டியூசனுக்கு அனுப்புவதிலேயே குறியாக இருக்கின்றனர். இதனால் தான் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய வயதில் நோயுடன் வாழ்கின்றனர்.

நீரிழிவு , ஹார்மோன் கோளாறுகள்,  ரத்த அழுத்தம்,  இருதய வலி அனைத்திற்கும் காரணம் முறையான உடற்பயிற்சி இல்லாதது தான். அதிக உடல் எடை உள்ளவர்கள் நடைபயிற்சி செய்தால் மூட்டு வலி ஏற்படும். இவர்களுக்கு சைக்கிளிங் ஸ்டேஷனரி சைக்கிளிங் தான் சிறந்த பயிற்சி. உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு warm up செய்ய வேண்டும்.

இயன்முறை மருத்துவம் என்றால் என்ன?

 இயலாதவர்களுக்கு (உடலியக்கம் பாதிக்கப்படுவோர் ) இயன்முறை மருத்துவம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிகிச்சை தேவைப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் ஒரு வலியால் பாதிக்கப்பட்டு இருக்கலாம்:

  1. முகவாதம் Bell's palsy

  2. கழுத்து வலி cervical pain cervical spondylitis cervical spondylosis

  3. தோள்பட்டை வலி shoulder pain periarthritis shoulder frozen shoulder

  4. முழங்கை மூட்டு வலி tennis elbow

  5. மணிக்கட்டு மூட்டு வலி carpal tunnel syndrome

  6. இடுப்பு அல்லது முதுகு வலி low back pain sciatica pain l4 L5 disc bulge

  7. மூட்டு வலி osteoarthritis pain

  8. குதிங்கால் வலி plantar fasciitis calcaneal spur

  9. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் paralysis and stroke

  10. பார்க்கின்சன் நோய் Parkinson disease

  11. மறதிநோய் Alzheimer's disease

  12. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் delayed milestone cerebral palsy

  13. முடக்கு வாதம் rheumatoid arthritis

  14. எலும்பு முறிவு fractures post operative condition for hip leg shoulder and elbow

  15. அறுவை சிகிச்சைக்குப் பின்பு தசைநார் கிழிந்தவர்களுக்கு ligament sprain grade 1 and 2

  16. உடல் பருமன் உள்ளவர்களுக்கு obesity related problems

  17. சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு lungs and breathing related problem

  18. கருத்தரித்தவர்களுக்கு prenatal exercises சுகப்பிரசவம் ஆக

  19. பிரசவமான பெண்களுக்கு இயல்பு நிலை திரும்ப postnatal exercises

  20. முதியவர்களுக்கான பயிற்சிகள் geriatric rehabilitation

  21. கை கால் ஊனமுற்றவர்களுக்கான பயிற்சிகள் shoulder knee amputations

  22. தீப்புண் காயம்பட்டவர்களுக்கு பயிற்சிகள் fire accident and burn cases

  23. காச நோய் உள்ளவர்களுக்கு பயிற்சிகள். Tuberculosis spine and tuberculosis hip

பக்க விளைவுகள் உள்ளதா இயன் முறை மருத்துவம்?

 இயன்முறை மருத்துவம் 100% பக்க விளைவுகள் இல்லாதது மருந்தில்லா மருத்துவம்.

இயன்முறை மருத்துவத்தின் சிறப்பு

  1. இயன்முறை மருத்துவத்தின் மூலம் நமது உடலில் உள்ள தசை தசை நார்களை உறுதிப்படுத்துவதன் காரணமாக நமது உடல் வலிமையாக இருக்கும்.

  2. எளிய பயிற்சிகள் மூலமாக நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

  3. ஊனமுற்ற அவர்களும் வயதானவர்களும் பிறரின் உதவியின்றி தனித்து செயல்பட முடியும்.

  4. இந்த இயன்முறை மருத்துவ பயிற்சிகளை தினந்தோறும் செய்வதன் மூலம் உங்கள் உடலில் உள்ள வலிகளை குறைக்கவும் ஒரு கட்டத்தில் முற்றிலுமாக வலியில் இருந்து நிவாரணம் பெற முடியும்.

  5. ஆரம்ப நிலையில் உள்ள சில பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சையோ உட்கொள்ள வேண்டிய மருந்துகளும் இல்லாமல் இயன்முறை மருத்துவத்தின் மூலம் எளிய பயிற்சிகள் வழியாக விரைவில் குணமடையலாம்.

திரு. வேங்கடரமணன் இருபது வருடங்களுக்கும் மேலாக இயன்முறை மருத்துவராக உள்ளார். மதுரை மற்றும் சென்னையில் பல இடங்களில் இவர் இயன்முறை மருத்துவம் அளித்து வருகிறார். மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர்கள் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போன்றவர்களுக்கும் சிறந்த முறையில் இயன் முறை மருத்துவம் அளித்துள்ளார். இந்திய ஹாக்கி அணியில் சிலகாலம் இயன்முறை மருத்துவராகப் பணிபுரிந்தவர்.

உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை இயன்முறை மருத்துவத்தின் மூலம் குணப்படுத்திக் கொள்ள இவரை அணுகலாம்.

இவருடைய எளிய பயிற்சி வீடியோக்கள் கீழ்க்கண்ட யூடியூப் லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.


269 views0 comments

Comments


bottom of page