05/12/2022 பரணி தீபம்
மாலை 6 மணிக்கு உங்கள் வீட்டு பூஜை அறையில் பஞ்ச தீபம் ( 5 தீபங்கள் நெய்யிட்டு, பஞ்சுத் திரியிட்டு) வாழை இலையை வட்டமாக நறுக்கி, தீபங்கள் உள்புறமாக ஒன்றோடு ஒன்று சேரும்படி வட்டமாக விளக்கேற்ற வேண்டும். ஒவ்வொரு விலக்கையம் கழுவி, மஞ்சள் குங்குமம் இட்டு, ஒவ்வொரு தீபத்தின் இடைவெளியில் மலர்கொண்டு அலங்கரிக்க வேண்டும்.
அகல் விளக்கு பயன்படுத்தலாம்.
வீட்டின் வாசலில் இருபுறமும் வாழை மரம் கட்டி அதில் நுனியை கிள்ளி விட்டு தீப்பந்தம் வைக்கலாம்.
வாசலில் கோலமிட்டு சில விளக்குகளை ஏற்றி வைக்கலாம்.
இன்றும் கோயில்களில் வாழை மரம் வைத்து தென்னங்கீற்று சுற்றி தீப்பந்தம் கொளுத்துவார்கள். ( சொக்கப்பனை)
06/12/2022 பெரிய கார்த்திகை/ திருக்கார்த்திகை திருவண்ணாமலை தீபம்.
மண்டல தீபம் (48 எண்ணிக்கை ஒரு மண்டலம்) 48 விளக்குகள் மூன்று வட்டங்களாக ஏற்றலாம்.
உள்வட்டம் 9 விளக்கு(நவ கிரகங்கள்) நடுவட்டம் 12 விளக்கு (12 இராசிகள்) வெளிவட்டார 27 விளக்குகள்( 28 நட்சத்திரங்கள்) குறிக்கும்படி ஏற்றலாம்.
ஒற்றைப்படை எண்ணிக்கையில் விளக்கு ஏற்றலாம். (3,5,7,9…)
குறைந்த பட்சம் 27 விளக்குகள் வீட்டின் அனைத்து அறைகள், வாசல் மொட்டைமாடி போன்ற இடங்களில் ஏற்றுவது சிறப்பு. அம்மி மிதத்தல் அருந்ததி பார்ப்பது போல், அன்று அம்மிக்கலில் தீபம் ஏற்றலாம்.
தீபத்தின் ஒளி இருளைப் போக்கும். அதுபோல் நம் மன இருளை போக்க இறைவனை வேண்டி அண்ணாமலையாருக்கு அரோகரா என்று வாழ்த்துக் கூறி, சிவபுராணம் மற்றும் திருவாசகம் படிக்கலாம். இறைவனை ஜோதிப் பிழம்பாக வழிபட வேண்டும்.
07/12/2022 பஞ்ச தீபம்
பஞ்ச தீபம் ஏற்றி வழிபடலாம்.
சைவம் Vs வைணவம் - இரண்டு பிரிவினரும் இந்த கார்த்திகை மாதம் தீபத் திருநாள் கொண்டாடுகின்றனர்.
அன்பே விளக்காகவும், ஆர்வமே நெய்யாகவும், சிந்தையே திரியாகவும் கொண்டு ஞான விளக்கை ஏற்றி நாராயணனைத் துதித்தவர் பூதத்தாழ்வார்.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாகஇன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகிஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்குஞானத் தமிழ் புரிந்த நான்
பூதத்தாழ்வாரின் திருவந்தாதி நினைத்தும் வழிபடலாம்.
சிவனடியார்கள், வைணவ ஆழ்வார் பாடல்களில் ஆர்வம் காட்டுவதில்லை.
தீபத்தின் வகைகள்/ விளக்கு வகைகள்
அன்ன விளக்கு( அன்னப்பறவை)
கஜலட்சுமி விளக்கு
அஷ்ட லட்சுமி விளக்கு
குபேர விளக்கு
திரிசூல விளக்கு
கஜ முக விளக்கு( யானை/ விநாயகர்)
பாவை விளக்கு
கிளி விளக்கு
லக்ஷ்மி விளக்கு
மயில் விளக்கு
தாமரை விளக்கு
சங்குச் சக்கர விளக்கு
குத்து விளக்கு
அகல் விளக்கு
அஷ்டோத்திர விளக்கு.
நாச்சியார் கோவில் விளக்கு இதில் சில விளக்குகளை கோயில்களில் மட்டுமே ஏற்ற வேண்டும்.
தீபத்தின் முகங்கள்
ஒருமுகம்- சுமார்
இருமுகம்- கணவன் மனைவி ஒற்றுமை
மூன்று முகம்- பிள்ளைகள் வழி நலம்
நான்கு முகம்- செல்வம்
ஐந்து முகம்/பஞ்ச முகம்- வளம்
தீபத் திரி வகைகள் மற்றும் பயன்கள்
வெள்ளெருக்கு- விநாயகர் அருள் கிடைக்கும். கடன் தீரும்.
பச்சை திரி- குபேர அருள் கிடைக்கும்
தாமரைத் தண்டு- செல்வம்
பஞ்சு - மங்களம்
வாழைத் தண்டு திரி – மன அமைதி, புத்திர பாக்கியம்
தீப எண்ணெய் மற்றும் பயன்கள் / சிறப்புகள்
நெய் – மஹாலக்ஷ்மி அருள், மோட்சம் கிடைக்கும்.
விளக்கெண்ணெய்- குடும்ப நலன்
நல்லெண்ணெய் ( எள்)- கடன், நோய் தீரும்
இலுப்பை எண்ணெய் – குல தெய்வம் அருள்
தேங்காய் எண்ணெய்- விநாயகருக்கு மட்டும்.
தீபம் ஏற்றும் திசைகள்
( தெற்கு திசை தவிர மற்ற திசைகளில் ஏற்றலாம்)
கிழக்கு – மங்களம்
மேற்கு- கடன் நோய் தீரும்
வடக்கு- செல்வம்
கார்த்திகைப் பெண்கள்
கார்த்திகை நட்சத்திர தொகுதி பல நட்சத்திரங்களைக் கொண்டிருந்தாலும், அதிர் ஆறு நட்சத்திரங்கள் கார்த்திகேயனை ( முருகனை) வளர்த்த கார்த்திகைப் பெண்களாக வணங்கப்படுகின்றன.
நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா என்பவனவாகும்.
முருகனை வளர்த்த கார்த்திகை பெண்கள் தவம் மேற்கொள்ளாமல் சிவனிடமிருந்து அஷ்டமா சித்திகள் பெற வேண்டி, பின்னர் அவர்களின் அலட்சியத்தால் ஆயிரம் ஆண்டுகள் வரை கற்பாறைகளாக சபிக்கப்பபட்டு சிவனால் சாப விமோசனம் பெற்றனர் ( கதை)
கார்த்திகை தீபம் இனிப்புகள்
அவல் பொரி உருண்டை
அப்பம் செய்யலாம்.
குழந்தைகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கைகளில் சானிடைசர் தடவி விட்டு, தீபம் ஏற்றக் கூடாது. எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய திரவ பொருட்களை விளக்கு களுக்கு அருகில் வைக்காதீர்கள் .
Comments